25.9..2022 முதல் 1.10..2022 வரையிலான வார ராசி பலன் :
மேஷம்:
கிரக சஞ்சார நிலவரப்படி, இந்த வாரம் உங்களுக்கு மிக நல்ல வாரம். அதிக நற்பலன் உண்டு. உங்கள் செயல்களில் கூடுதல் நன்மை கிடைக்கும். மனமகிழ்ச்சி கூடும். நியாய தர்மம் மிகுந்த நல்லவர்களின் நட்பு உதவிகரமாக அமையும். வீடு வாகனத்தில் கூடுதல் நன்மை பெற அபிவிருத்திப் பணி புரிவீர்கள். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து, உங்கள் பெருமையை உயர்த்துவார்கள். வழக்கு விவகாரங்கள் வெற்றிகமாக் உங்கள் சார்பில் தீர்ப்பாகும்.இல்லறத்துணை அன்பு பாசத்துடன் நடந்து குடும்பநலன் பாதுகாத்திடுவர். தொழில் வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றி உற்பத்தி விற்பனையை அதிகரிப்பீர். சீரான பண வரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவர். குடும்ப்ப பெண்கள் கணவரின் பண வரவுக்கேற்ப செலவுகளில் நிதானம் கொள்வர். தாய்வீட்டு உதவி பெற அனுகூலம் உண்டு. மாணவர்கள் திட்டமிட்டு படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவர்.
ரிஷபம்:
இது உங்களுக்கு அதிர்ஷ்டமான வாரம். மனசாட்சிக்கு மதிப்பளித்து செயல்படுவீரகள். உங்களுக்கு இன்னல் த்ரவிரும்புவோரின் கெடு செயல் முடங்கிப் போகும். உடல் நலத்தில் நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள். விலகிச் சென்ற நண்பர், விரும்பி அன்பு பாராட்டுகிற நிலை உண்டாகும். வாழ்வில் கூடுதல் வளம் பெற திட்டமிட்டு பணி புரிவீர்கள். உபரி பண வரவு கிடைத்து, குடும்பத் தேவைகள் பெருமளவில் பூர்த்தியாகும். பூர்வீக சொத்திலிருந்து வரும் வருமானம் சராசரி அளவில் இருக்கும். உடல்நலத்தில் நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள்.இல்லறத்துணை விரும்பிய ஆடை அணிகலன் வாங்கித் தர தாராள பன வசதி துணை நிற்கும். தொழிலில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர் சிறப்பான பணி புரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிக்கான ஆலோசனை சொல்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.
மிதுனம் :
கிரக சஞ்சாரங்கள் அவ்வளவு சீராக இல்லை என்பதால், எந்த செயலிலும் நிதான குணம் பின்பற்றுவது நல்லது. வேலைப்பளு மனதில் சஞ்சலம் உருவாக்கும். உங்கள் மீது அக்கறை உள்ளவரின் நல்ல ஆலோசனையால், வாழ்க்கையில் எதிர்வரும் சிரமங்களைச் சமாளிப்பீர்கள். வீட்டிற்குத் தகுந்த பாதுகாப்பும், வாகன பயணத்தில் மித பாதுகாப்பும் பின்பற்றுவது அவசியம். பிள்ளைகள் ஆடம்பட செயல்பாடுகளில் ஆர்வம் கொள்வர். கணடிப்பதைத் தவிர்த்து, இயன்ற அளவில் அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிரியிடமிருந்து சாமர்த்தியமாக விலகுவது நல்லது. இல்லறத்துணை உங்கள் நல்ல குணத்தைப் பாராட்டுவார். கூடுதல் உழைப்பினால், தொழிலில் உற்பத்தி விற்பனையை சராசரி அளவுக்குக் கொண்டுவருவீர்கள். அவசிய செலவுக்கு கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். பெண்கள் தங்கள் சிக்கன நடவடிக்கையால், குடும்பத்தைக் காத்திடுவர். மாணவர்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவில் பேசுவது நல்லது.
கடகம்:
உங்களின் முக்கியமான பணிகள் நிறைவேற அதிகமான பொறுப்புணர்வுடன் நடப்பது நல்லது. வீண்பேச்சு பேசி பொழுதைக் கழிப்பவர்களிடமிருந்து விலகினால்,மன அமைதியைப் பாதுகாக்கலாம். இளைய சகோதர்களின் கருத்துக்கு மாறான் ஆலோசனைகள் சொல்லவேண்டாம். இல்லறத்துணை உங்கள் நல்ல குணங்களைப் பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் அரசின் சட்டதிட்டங்களைக் கூடுதல் அக்கறையுடன் பின்பற்றுவது சிரமம் தவிர்க்க உதவும். பணியாளர்கள் ஒருமுகத் தன்மையுடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராது. பெண்கள் சேமிப்பு பணத்தைக் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துவர். மாணவர்கள் வெளியில் சுற்றுவதைக் குறைப்பதால் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.
சிம்மம்:
உங்கள் புத்திசாலித்தனமான பேச்சினால் நண்பர் உறவினர்களிடம் கூடுதல் மதிப்பு மரியாதை பெறுவீர்கள், மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். குடும்பத் தேவைகளை நிறைவேற்ற தாராள அளவில் பணம் செலவு செய்வீர்கள். வீடு, வாகனத்தில் பயன்பாட்டு வசதி சீராக இருக்கும். பிள்ளைகள் படிப்பு வேலை வாய்ப்பில் முன்னேற்றம் பெறுவர். எதிர் மனப்பான்மையுடன் பேசியவர்களும் உங்கள் இனிய குணம் பார்த்து அன்பு பாராட்டுவர். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து அதிக லாபம் வரும். புதிய தொழிற் கருவிகள் வாங்க அனுகூலம் உண்டு. பணியாளர்களுக்கு பதவி உயர்வு சலுகைப் பயன் கிடைக்கும். பெண்கள் ஆரோக்கிய உடல்நலம் அமைந்து குடும்பப் பணிகளை ஆர்வமுடன் மேற்கொள்வர். மாணவர்கள் நன்றாகப் படித்து பெற்றோர் ஆசிரியரிடம் பாராட்டு பெறுவர்.
கன்னி:
எதிர்பாராத வகையில் புதிய லாபங்கள் கிடைக்கும். எவரையும் மதித்துப் பேசுவதால் மட்டுமே பெற்ற நற்பெயரை பாதுகாக்க இயலும். வீடு ,வாகனத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதால், திருட்டு பயம் தவிர்க்கலாம். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகள் நற்குண நற்செயல்களால் உங்களை மகிழ்விப்பர். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு பாசம் மனதை நெகிழ வைக்கும். தொழில் வியாபாரத்துக்குத் தேவையான அரசாங்க உதவி கிடைக்கும். தொழில் நுட்ப பணியாளர்கள் புதிய நுட்பங்களை அறிந்துகொள்வர். பெண்கள் கணவரின் அன்பும் தாராள பண வசதியும் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.
துலாம்:
வாழ்வில் கூடுதல் வளம் பெற புதிய வாய்ப்பு கிடைத்து நலமடையக்கூடும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவுகிற மனப்பான்மை வளரும். புதிய வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தி முன்னேற்றம் பெறுவீர்கள். வீடு வாகனத்தில் பராமரிப்புப் பணி தேவைப்படும். பூர்வீக சொத்தில் பண வரவு சீராகும். பிள்ளைகள் புதுமைகளை விரும்புவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வியாபாரத்தில் வியத்தகு வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர் நிர்வாகப் பணி சிறக்க பயனுள்ள ஆலோசனை சொல்வர். பெண்கள் விதவிதமான உணவு சமைத்து குடும்ப உறுப்பினரின் பாராட்டு பெறுவர்.
மாணவர்கள் புதிய முயற்சியினால், படிப்பில் முன்னேற்றம் காண முயல்வர்.
விருச்சிகம்:
முக்கியமான பணிகளை பிறரிடம் ஒப்படைக்கவேண்டாம். நீங்களே பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவது அவசியம். உங்கள் தன்மானத்துக்கு சோதனை வரும் தருணங்களை நீங்கள் சகிப்புத் தன்மையுடன் பொறுத்துகொள்வதே சங்கடம் தவிர்க்கும் வழியாகும். அப்போதுதான் உங்கள் சுய கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். வாகனம் ஓட்டும்போது மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவதில் நிதான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. நேரத்துக்கு உணவும் சீரான ஓய்வும் மேற்கொள்ளவேண்டியது உங்கள் ஆரோக்கியத்துக்கு அவசியமாகிறது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமும் அதிக உழைப்பையும் செலுத்தி மேன்மையடைவீர்கள். பெண்கள் உபயோகமற்ற பொருட்களை கடனுக்குக் கிடைப்பதால் வாங்கி கடனுக்கு ஆளாக நேரும்.அரசியல்வாதிகள் தன் சொல்லுக்குக் கட்டுப்படாதவர்கள் பிரச்சினைகளை சரிசெய்ய முயற்சிக்க வேண்டாம். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
தனுசு:
வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் நடை போடுவீர்கள். கூடுதல் சொத்து சேர்க்கை பெற, நல்யோகம் உண்டு. சமூக அந்தஸ்து உள்ளவர்களின் அன்பு உதவி கிடைக்கும். வீடு வாகனம் திருப்திகரமான பயன்பாட்டைத் தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கான திட்டங்களை மேற்கொள்வீர்கள். . இதுவரை இருந்துவந்த கடன்சுமை குறையும் ப்ணிச்சுமையும் குறையும். இல்லறத்துணையின் குடும்ப உறுப்பினர்கள் உங்களை உபசரித்து பெருமிதம் கொள்வர். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்திப்பணி புரிவீர்கள். புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபவிகிதம் கூடும். பணியாளர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு சம்பள உயர்வு கிடைக்க அனுகூலம் உண்டு. பெண்கள் குடும்பத்தின் செல்வ வளம் அதிகரித்து விரும்பிய ஆடை அணிகலன் வாங்குவர். மாணவர்கள் ஆசிரியரின் சிறப்பு கவனம் கிடைத்து படிப்பில் முன்னேற்றம் அடைவர்.
மகரம்:
இந்த வாரம் சிறுசெயலும் நிறைவேற அதிகம் முயற்சிக்க வேண்டியிருக்கும். உங்களைப் புகழ்ந்துபேசி சுய லாபம் பெற முயற்சிப்பவர்களிடமிருந்து விலகுவது நல்லது. புதிதாகக் கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதால், வாழ்வியல் நடைமுறைகள் சிறப்பாக அமையும். பிள்ளைகள் கூடுதல் அன்பு பாசத்துடன் நடந்துகொள்வர். அவசிய செலவுகளுக்கு முன்னுரிமையளித்து தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்த்தால், கடனிலிருந்து தப்பிக்கலாம். இல்லறத்துணை உங்கள் இன்ப துன்பங்களில் சம பங்கெடுத்துக்கொல்வார். தொழில் வியாபார நடைமுறை சிறக்க முன் அனுபவங்களை உணர்ந்து செயல்படுவது நல்லது. பணியாளர்கள் ஒழுங்கு நடவடிக்கை வராதபடி பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். பெண்கள் பிள்ளைகளின் மனதில் நற்குணம் பதிய வைப்பர். மாணவர்கள் நன்றாகப் படித்து பரிசும் பாராட்டும் பெறுவர்.
கும்பம்:
மனதில் புதிய சிந்தனைகளும் செயல்களில் புதிய ஈடுபாடும் தெரியும். பிறர் மனம் அறிந்து பேசி நற்பெய்ரைப் பாதுகாத்தியடுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்று வெற்றியடைவீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்துக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பூர்வீக சொத்தில் பெறுகிற பணவரவு அவசிய செலவுகளுக்கு பயன்படும். இல்லறத்துணை உங்கள் மீது கருத்து வேறுபாடு கொண்டு முரண்படுகிற சூழ்நிலை உருவாகும். தொழிலில் உற்பத்தியும் விற்பனையும் அளவாக இருக்கும். பணியாளர்கள் கடமைகளை சரிவர நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமினறி பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்கக்கூடாது. மாணவர்கள் ஆடம்பர செயல்பாடுகளைக் குறைப்பதால் படிப்பில் கவனம் வளரும்.
மீனம்:
இந்த வாரம் கூடுதல் பணச் செலவு ஏற்படும். செலவுகள் பணவரவுக்காகக் காத்திருக்கும் சூழல் நிலவும். ஆர்வமுடன் செய்யும் பணிகள்கூட குறைந்த பலனையே பெற்றுத் தரும். நண்பருடன் வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. அதிக விலையுள்ள பொருட்களைப் பாதுகாப்பதில் கவனம் தேவை.எதிரியிடமிருந்து விலகுவதால், சிரமங்களிலிருந்து தப்பிக்கலாம். தொழில் ,வியாபாரம் தொடர்பாக நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியிருக்கும் பிறருக்காக பணப் பொறுப்பு ஏற்கக்கூடாது. பணியாளர்கள், பெண்கள் சோர்வடைவர். பெண்கள் கணவருக்கு ஆறுதலாக உதவுவது , குடும்ப ஒற்றுமையைப் பாதுக்கும். மாணவர்கள் விளையாட்டுக்குணம் தவிர்த்து , பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உங்கள் ஜாதகத்துடன் ரூ.950/- செலுத்தி moonramkonam@gmail.com என்ற வெப்ஸைட்டிற்கு தொடர்பு கொள்ளவும். ]
*********************************************************