Sep 072022
 

விளாம்பழம்- மருத்துவ குணங்கள்

மருத்துவ் அகுண்ம நிறைந்தது விளாம்பழம். இதன் மரம, இலைகளிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
• தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வ்ந்தால், அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் விளாம்பழத்தில் விட்டமின் பி2 மற்றும் கேல்ஷியம் அதிகமாக இருப்பதால், பல் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
• வறட்டு இருமல், வாய்க் கசப்பு குணமாக் விளா மரத்தின் பட்டைகளைப் பொடியாக்கி கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்கவும்.
• விளாம்பழத்தின் சதைப் பகுதியை :தனியே எடுத்துக் காய வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் சம அளவு கஸ்தூரி மஞ்சல்,, பார்லி, பூலாங் கிழங்கு, , காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சோப்புக்குப் பதிலாக குளிக்கும்போது பயன்படுத்தலாம். இதனால், தோல் மிருதுவாவதுட,ன், கரும்புள்ளிகள் மறையும்.
• நரம்புத் தளர்ச்சி குணமாக வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.
• தயிருடன் விளாங்காயை சேர்த்து பச்சடி போல செய்து சாப்பெட்டு வந்தால், , வாய்ப் புண் மற்ரும் அல்சர் குணமாகும்.
• தினமும் ஒரு வ்ளாம்பழம் என 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்தக் கோளாறுகள் சரியாகும். மற்றும் உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
• விளா மரத்தின் இலை முடி கொட்டும் பிரச்சினைக்கும் தீர்வு அளிக்கிறது.
அடர்த்தியான தலைகமுடி : விளா மரத்தின் இலை, செம்பருத்தி இலை- தலா 5, கொட்டை நீக்கிய பூந்தித் தோல்-4 என எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து, , தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் குலிக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால், தலை முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
****************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)