Jul 122022
வீட்டுக் குறிப்புகள்:
• பட்டுச் சேலைகளை துவைக்கும் போது, அலசும் நீருடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்துகொண்டால் சாயம் போகாது; மங்காது; சேலையும் பளிச்சிடும்.
• வெள்ளிப் பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளைப் போட்டு வைக்க வேண்டும்.
• ஆடையில் படிந்த மருதாணிக் கறை போக அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, , பின் சோப்பு போட்டு அலசினால் கறை போய்விடும்.
• மேஜை டிராயரின் இரு மூலைகளிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தடவினால் எப்போதும் சிரமமின்றி திறந்து மூடலம்.
• பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊ,ற வைத்துக் கழுவினால், அவை நன்றாக பளிச்சிடும்.
*********************************************