Dec 132021
 

2022 புத்தாண்டு பல்ன்கள்

கும்ப ராசி:

இந்த வருடம் குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். பொதுவாக ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பது நல்லதல்ல. மனச் சஞ்சலங்களையும் உடல் அசௌகரியங்களையும் கொடுப்பதுதான் ஜென்ம குருவின் இயல்பு.
இடமாற்றம், பதவி மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும். எல்லாவற்றிலும் ஒரு மந்தமான போக்கு காணப்படும். வாக்குவாதங்கள் கலகத்தில் முடியும். வம்புச் சண்டைகள் தேடி வரும். கௌரவம் பாதிக்கப்படும். அலைச்சலும் அதிகமாக இருக்கும். உங்களுடைய போக்கிலும் செயல்களிலும் ஒருவித தளர்ச்சி ஏற்படும். மனதில் சலிப்பு இருந்துகொண்டே இருக்கும். சோர்வாகக் காணப்படுவீர்கள். உற்சாகமில்லாமல் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். மனம் அடிக்கடி துவண்டு போகும். சந்தேகம், கவலை, குழப்பம், வீண்பயம் போன்றவை உங்களை சூழ்ந்திருக்கும்.
முன்னேற்றத்தைப்பற்றிச் சிந்தித்தாலும் தெளிவான பாதை புரியாமல் திண்டாடுவீர்கள். தேக்கமும் தயக்கமும் உண்டாகும்.
சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே தடுமாறுவீர்கள். அதனால் கடன் தொகையை திருப்பி செலுத்துவது பற்றி உங்களால் யோசிக்கவே முடியாது. அதன் காரணமாக அவமானங்களையும் , வேதனைகளையும் சந்திக்க நேரும். மனக் கவலை சூழ்ந்தபடியே இருக்கும். . உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம். ஜென்ம குரு பொருளாதார வசதிகளைச் செய்து கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. வரவேண்டிய பணம் தடைப்பட்டு தாமதமாகக் கைக்கு வரும். வருவதும் முழுவதுமாக வராது. அரையும் குறையுமாக வந்து சேரும்.
வழக்கமான செலவுகளே மேலும் மேலும் அதிகரிப்பதால், பற்றாக்குறைப் பிரச்சினை ஏற்படுவதும் அவற்றைச் சமாளிப்பதுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கும். திடீர் நெருக்கடிகள் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். அதனால் கைமாற்று வாங்கப் போய் பணத்தை முன்னிட்டு கருத்து வேறுபாடு, ஏமாற்றம், இழப்பு முதலியவை ஏற்படும். உங்கள் கையில் இருக்கும் பணம் பறந்து செல்லத் துடிக்கும். முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்துங்கள்.
இதையெல்லாம் படித்துவிட்டு பயந்துபோய்விட வேண்டாம். இந்த ஓராண்டுக் காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்று பயந்துவிட வேண்டாம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது. எல்லாவகையான சிக்கல்களையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். செலவுகளைச் சுருக்கி சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.உங்களுக்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
இந்த காலக் கட்டத்தில், பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
ஜென்ம ராசியில் குரு இருக்கும்போது ‘குருபலம்’ கிடையாது. பொதுவாக குருபலம் இருக்கும்போது சுபகாரியங்களுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதிகம். குருபலம் இல்லாத சமயம் போதுமான பணம் புரட்டுவது, தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது, சட்டென்று சுபகாரியம் நடைபெறுவது இவற்றிலெல்லாம் இழுபறியாக இருக்கும். ஏற்கெனவே திருமணமான தம்பதியரிடையே குடும்ப நிர்வாகம் , பணப் பற்றாக்குறை சம்பந்தமான பிரச்சினைகள் அடிக்கடி எழும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலுவல் திணிப்பு அசௌகரியங்கள் என்று பலவாறாக தம்பதியரிடையே இணக்கம் குறையலாம். பிள்ளைகளைப் பற்றிய பொறுப்புகளும் பெரும் சுமையாக இருந்து கனத்துக்கொண்டிருக்கும்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாம்ல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ மாட்டார்கள். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைக்ள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு வில்லங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.
சட்டென்று முடிவெடுக்கவும் ,சாமர்த்தியத்தைக் காட்டவும் உங்களிடம் துரிதமான புத்திசாலித்தனமும் , செயல் வேகமும் இல்லாமல் போகும். கைநழுவிப்போன விஷயங்களை நியாயப்படுத்துவதற்காக ஏதாவது நொண்டிச் சாக்குகளை சொல்லிக்கொண்டிருப்பீர்கள். சரியான சந்தர்ப்பங்களை தகுந்தபடி பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டுவிட்டோமோ என்று பின்னால் சஞ்சலப்ப்டுவீர்கள். நன்றாகச் செய்திருக்கலாமே என்று செய்து முடித்ததற்கப்புறம் உறுத்தலுக்கு ஆளாவீர்கள். பிறரிடமிருந்து தக்க சமயத்துக்கு உதவி கிடைக்காமல் போய்விட்டதே என்று வருந்துவீர்கள். தவறான அணுகுமுறை, தகாத சகவாசம், தடுமாற வைக்கிற கடமைகள் இப்படியெல்லாம் நேராமல் இருக்க நீங்கள் அதிகப்படியான எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். பொதுவாக எதிலும் அகலக் கால் வைக்காதீர்கள். இதையெல்லாம் பார்த்துப் பயந்துவிட வேண்டாம். உங்களை எச்சரிக்கைப் படுத்தவே சொல்லப்படுகிறது.
அரசியல்வாதிகளுக்கு இது அதிர்ஷ்டமாக இருக்காது. போட்டி, பொறாமை, வெளிப்பகை, உள்விரோதம் மேலிடத்துக் கெடுபிடி , கீழ்மட்டத்தில் நெருக்கடி என்று போராடவே நேரம் சரியாக இருக்கிறது. பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்குவதே சிரமமாக இருக்கும்.
கலைஞர்கள் காலத்தைத் தள்ளிக்கொண்டு போக வேண்டியதுதான். விருது வாங்கவோ பாராட்டுப் பெறவோ இது ஏற்ற தருணம் அல்ல. விவசாயிகளும் போட்ட காசை திரும்ப எடுக்க முடியாது. மாணவர்கள் ஆசிரியர்களையே நம்பிக்கொண்டிருக்கக்கூடாது. தங்கள் உழைப்பையும், அறிவையும் நம்பி தேர்வுகளை வெல்ல வேண்டும்.
வியாபாரிகள் பேரம் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண முடியாது. ஆனால் சட்டென்று முடிவெடுக்க வேண்டாம். விலை போகாத சரக்குகளில் முதலீட்டை முடக்க வேண்டாம். வரி ஏய்ப்பு, கலப்படம், சட்டமீறல் பிரச்சினை எதிலும் இறங்குவது ஆபத்து. இந்த சமயம் காலை வாரிவிட்டு விடும்.
உத்தியோகஸ்தர்கள் என்னதான் கடினமாக உழைத்தாலும் , மேலதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாட்டம் உங்களுடைய தவறுகளை மட்டுமே குத்தி காட்டுவார்கள். பதவி உய்ர்வு சம்பள உயர்வையெல்லாம் இப்போது எதிர்பார்க்க முடியாது.
பெண்களுக்கு இது அதிர்ஷ்டமான காலம் கிடையாது. கலகலப்பு குறைந்து, எப்போதும் பிள்ளைகள் பற்றியும் குடும்ப பொருளாதார பிரச்சினை பற்றியுமே கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுவீர்கள். கணவரிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் ஏதாவது பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை பெரும் வேதனையைக் கொடுக்கும். வேண்டிய நகைகளையோ ஆடை ஆபரணங்களையோ வாங்க முடியாது.

ஏழரைச் சனி நடைபெறுவதால்,  சனியினால் தொல்லைகளே ஏற்படும்.  இதற்காக கவலைப்படவேண்டாம்.  உங்கள் ஜாதகத்தில் திசா புத்திகள் சரியாக இருந்தால் இந்த கஷ்டங்களை சமாளிக்கும் நிலைமை ஏற்படும்.

பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் துன்பம் பறந்தோடும். குல தெய்வ வழிபாடும் அவசியம்.சனிக்கிழமியகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபம்  ஏற்றி வழிபடுவது நன்மையளிக்கும்

இந்த புத்தாண்டு     மன  அமைதியுடன்   எல்லா வகையிலும்  நலம் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
##################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)