2022 புத்தாண்டு பலன்கள்
மீன ராசி :
இந்த வருடம் 2022 நவம்பர் மாதம் குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ‘விரய ஸ்தான’த்தில் சஞ்சரிப்பதால், குரு உங்களுக்கு ‘விரய குரு’வாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பனிரண்டாம் வீடு என்பது விரய ஸ்தானம் என்பதால் தர்ம காரியங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பிரயாணங்களால் அலைச்சலும் சிரமங்களும் ஏற்படும்.
தவறிக் கீழே விழுவதால் கைகள் அல்லது கால்களில் சிறு காயங்கள் ஏற்படும். இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் உண்டாகலாம்.
பொதுவாக குரு பகவான் பனிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது மனதில் ஊக்கம் மிகக் குறைவாக இருக்கும். அடிக்கடி அலுப்பும் சலிப்பும் ஏற்படும். எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாது. அதன் காரணமாக அவமானங்களும் , மனக் கவலைகளும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. மேலும் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை வியாதி ,செரிமானக் குறைவு ,மன அழுத்தம் , கண் தொடர்பான நோய்கள் போன்றவற்றில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீணான மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். சிலருக்கு நுரையீரல் வயிறு மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு உண்டாகும். போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால், சின்ன செலவுகளிலேயே முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட உங்கள் விரக்தி, மனக் குழப்பங்களின் மூலம் போதைப் பழக்கத்தில் மாட்டி, மருத்துவச் செலவை மிகவும் பெரிதாக்கி பணத்தை செலவழிப்பீர்கள்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.
மனைவி வகையில் செலவுகள், பிள்ளைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் செலவுகள் ,செலவுகள் போன்றவற்றிற்காகவும் நீங்கள் அதிகமாகப் பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். வீடு கட்டுதல், சொத்துக்களை விருத்தி செய்தல், குடும்பத் திருமணத்தை கோலாகலமாக நடத்துதல் போன்ற பயனுள்ள செலவுகள் பணத்தை வேகமாகக் கரைக்கும். நண்பர்களுடன் சுற்றுபவர்கள், உல்லாச பேர்வழிகள் போன்றவர்கள் கட்டுப்பாடாக இல்லாவிட்டால் கையில் இருப்பதைத் தொலைத்துவிட்டுக் கடனாளியாகி விடுவார்கள். சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு நிறைய செலவு செய்வார்கள். புதிதாக வீடு கட்டுதல், மனை வாங்குதல் போன்றவற்றிற்காக சிலர் பெரிய தொகைகளை கடன் வாங்கவும் செய்வார்கள். நகை நட்டுகளை அடமானம் வைத்துப் பணம் புரட்டவும் செய்வார்கள். இப்படியாக விரய குரு கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வழியில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் கடன் எல்லை தாண்டிவிடும்.
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.முடிந்தவரை கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இப்போது கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராது. அதனால் பல சங்கடங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். பெருந்தொகையை மற்றவர்களிடம் கொடுத்து அனுப்புதலும் கூடாது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். ஊதிய உயர்வுகள் தட்டிப் போகும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். அதனால் பதவி உயர்வுகள் பாதிக்கப்படும். அதனால் ஊதிய உயர்வுக்கு வழியின்றிப் போகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். அதனால் இரண்டு இடத்தில் குடும்பம் வைக்க வேன்டியதால், விரயச் செலவு ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளால் சில தொல்லைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் படிப்பு, வேலை வாய்ப்பு முதலியவற்றில் சில தடைகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாட்டில் தாமதம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் சிலருக்கு வில்லங்க விரயங்கள் ஏற்ப்டலாம். உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கைகொடுக்க முடியாமல் போகும்.
தனகாரகனான குரு பகவானின் விரய ஸ்தான வாசம் செய்வதால் நீங்கள் எல்லா வகையான செலவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். பல வழிகளிலிருந்தும் பல திசைகளிலிருந்தும் செலவுகள் வந்து உங்கள் கையில் உள்ள பணத்தை அள்ளிக் கொண்டு போகும். இன்றைக்கு இவ்வளவுதான் செலவு பண்ணலாம் என்பதெல்லாம் விரய குருவிடம் நடக்காது. வழக்கமாக ஏற்படும் செலவுகள் இப்போது அதிகமாக ஏற்படும்.
குரு பார்வைகளால், உங்களுக்கு ஏற்படும் கெடுதல்கள் ஓரளவுக்கு முடங்கும் வாய்ப்பு இருப்பதால் , நீங்கள் கொஞ்சம் ஆறுதலடையலாம் . உங்கள் ராசிக்கு பனிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானின் அருள் நிறைந்த பார்வைகளில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுகிறது. இதனால் கல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல் நல்ம் சிறக்கும். இடம், குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்து பத்துகள் ஆகியவற்றை சீர்திருத்திக்கொள்ளவோ , பெருக்கிக்கொள்ளவோ முடியும். குரு பகவானின் மேலும் இரு பார்வைகள் கெட்ட இடங்களான ஆறு, எட்டு ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. இதனால், நோய் நொடிகளைக் குணப்படுத்திக்கொள்ளவும், கடன் தொந்தரவுகளை சரிப்படுத்திக்கொள்ளவும் , எதிர்ப்பு, போட்டிகளை சமாளித்துக்கொள்ளவும் முடியும்.
பெண்கள் செலவுகள் அதிகமாக செய்வதால் பணம் கைக்கு தங்காமல் போகும். வீட்டு செலவுக்கும் பிள்ளைகளுக்காவும் ஆகும் செலவுகளுக்கு உங்களுக்குப் பணம் தராமல் குடும்ப கஷ்டங்களில் போய்முடியும்.
மாணவர்களுக்கு மறதி, மந்தநிலை போன்றவை ஏற்பட்டு படிப்பைக் கெடுக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேம்போக்காக சுற்றுவதற்கெல்லாம் இது நேரம் கிடையாது. மேலிடத்து ஆதரவு, அதிகாரிகளின் ஒத்துழைப்பு இதுவெல்லாம் சரிவர கிடைக்காது. அலுவலகத்தில் கடன்பெற்று, வீடு கட்டுதல், பிள்ளைகளின் கல்விச் செலவு என்று பணம் செலவாவதால், சம்பளத்தில் பிடித்தம் செய்து , கைக்கு குறைவான சம்பளம் பெற்று சிரமம் ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இதற்கெல்லாம் இது ஏற்ற தருணம் இல்லை.
வியாபாரிகளுக்கு பெருத்த லாபம் வராது. கடன் வாங்கி வியாபாரத்தில் போடுவதால், கடன் தவணை கட்டவே சரியாகப் போகும். கையில் லாபம் நிற்காது. விவசாயிகளுக்கும் சரியான நேரமல்ல. வேலையாட்களுக்கு கூலி கொடுத்து மாளாது. இயற்கையும் ஒத்துழைக்காமல் சரியான சாகுபடி இல்லாமல், அறுவடையில் கையில் நிற்பது ஏதுமில்லை என்றாகும். கலைஞர்களுக்கு முடக்கமான நேரம்தான். முட்டுக்கட்டைகளையும் , தடங்கல்களையும் சமாளிப்பதே பெரிய வேலையாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகளே பெரிய சுமையாகப் போகும். ஊழல், லஞ்சம், சட்ட மீறல் இப்படி சிக்கிக்கொள்ளாமல் இருப்பதே பெரிய கஷ்டம். அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் புரட்டுவதோ, மக்களிடம் நற்பெயர் வாங்குவதோ சிரமம்.
பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.
குரு பகவானின் சுபப் பார்வைகள்:
உங்கள் ராசிக்கு பனிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைகளில் ஒரு பார்வை மிதுன ராசிக்கு நான்காமிடத்தில் ஒளி வீசுகிறது. இதனால் கல்விமேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் உயரும். உறவினர்கள் ,நண்பர்கள், வெளிவட்டாரத் தொடர்புகள் இவை அதிகமாகும். இடம், குடியிருப்பு, வீடு, தோட்டம் இதர சொத்துக்கள் ஆகியவற்றை சீர்திருத்திக்கொள்ளவோ ,பெருக்கிக்கொள்ளவோ செலவுகளோடு செலவாக அடிப்படை வசதிகள் பெருகும். குருபகவானுடைய மேலும் இரு பார்வைஅக்ள் ,கெட்ட இடங்களான 6,8 ஆகிய ஸ்தானங்களில் பதிகின்றன. இதனால் நோய் நொடிகளைக் குணப்படுத்திக் கொள்ளவும் ,கடன் தொந்தரவுகளை சரிக்கட்டிக் கொள்ளவும். எதிர்ப்பு, போட்டி ,விவகாரம் வழக்கு ஆகியவற்றை சமாளித்து ,முறியடித்து வெற்றிகொள்ளவும் முடியும். இப்படியாக கெட்ட பலன்கள் கட்டுக்கடங்குவதும் தடைப்படுவதும் போன்ற சாதகமான பலன்கள் நடக்கும்.
இந்த வருடம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு மிகவும் யோகமான பலன்களாக நடக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கஷ்டங்கள் பெருமளவு குறையும்.
############
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^