Dec 122022
 

2023-புத்தாண்டு பலன்கள்-:

கடகம் :

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குரு பகவாஉங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு குரு பகவான் 10 ல் சஞ்சரிக்கிறார். சனி அஷ்டம சனியாக வலம் வருகிறார். நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. ராகு 10லும் கேது 4லும் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. இனி பலன்களைப் பார்க்கலாம்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
இந்த ஆண்டு, குரு பகவான் ஏப்ரல் மாதம் வரை உங்கள் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாள் முதல், உங்களுக்கு யோகமான நேரம்தான். ஏராளமான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்துவரும் விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை என்ற சூழ்நிலைகள் ஏற்படும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடுமப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
இந்த ஆண்டு ஏபரல் மாதத்துக்குப் பிறகு குரு 10ல் சஞ்சரிக்க ஆரம்பித்தபிறகு சுப பலன்களை எதிர்பார்க்க முடியாது. குரு இந்த வருடம் குரு 10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக, வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும.
moonramkonamkonam.com]
இந்த வருடம் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான மகர ராசியிலும் இடம் பெயர்கிறார்கள் .
இனி பலன்களைத் தெரிந்துகொள்வோம். ராகுபகவானின் 10ம் இடத்து சஞ்சாரம் ஜோதிட சாஸ்திரப்படி அவ்வளவு சிறப்பானது அல்ல. தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலர் மழைய தொழிலை விட்டுவிட்டு புதிய தொழிலுக்கு மாறுவார்கள். தொழிலில் எவ்வளவுதான் சீர்திருத்தங்களையும் நூதன முறைகளைப் புகுத்தினாலும், மாற்றங்களை மேற்கொண்டாலும், முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. இதுவரை தொழில் இல்லாமல் இருந்தவர்கள் இப்போது புதிய தொழிலைத் தொடங்குவார்கள். சிலர் புதிதாக தொழிற்சாலை அல்லது வீடுகளுக்குண்டான கட்டுமானப் பணிகளைத் தொடங்குவார்கள். தொழில் ரீதியான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக, உடல்நலம் குறையும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இருந்தபோதும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். . துக்க நிகழ்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் நேரும்.
மேலதிகாரிகள் உங்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள்
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைக் காணலாம். கேது பகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்ல சஞ்சாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தாயுடனும் தாய் வழி உறவினர்களுடனும் கருத்து வேற்றுமை தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பின்னடைவு ஏற்படும். ஃபைல்கள் காணாமல் போகலாம். அரசுக்குரிய பணத்தை கஜானாவில் கட்டுமுன் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். வேலை இழக்கும் சூழல்கூட உருவாகலாம். வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம் கெடும், மருத்துவச் செலவு ஏற்படும்.
சனியின் 8-மிட சஞ்சாரம் தொல்லை தரும் வண்ணம் அமையும். சனியின் சாதகமற்ற 8 மிட சஞ்சாரத்தினால், எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும்.
பரிகாரம்:
உங்களுடைய ராசிக்கு சனியின் சஞ்சாரம் சரியில்லை என்பதால் சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடவும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. துர்க்கையம்மனை வழிபடுங்கள் கருப்பு உளுந்து தானம் செய்யவும். மகாலக்ஷ்மி கோவிலுக்கு செல்லவும். வினாயகர் கோவிலைச் சுத்தம் செய்து வழிபடவும். குரு பகவான் ஆண்டு பிற்பாதியில், சரியான சஞ்சாரம் செய்யாததால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை கொண்டக்கடலையும் மஞ்சள் மலர்களையும் சாத்தி வழிபடவும்.
இந்த ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டுதான். வாழ்க!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
********************************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)