Dec 112022
 

2023 புத்தாண்டு பலன்கள்

– கும்ப ராசி:

இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஏப்ரல் மாதம் வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2-மிடத்தில் சஞ்சரிக்கிறார். சனிபகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். ராகு-கேது கிரகங்கள் 3 மற்றும் 9 லும் சஞ்சரிக்கிறார்கள்.இனி பலன்களைப் பார்க்கலாம்.
குருவின் 2-மிட சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பிரயாணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் வர்த்தகம் மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அரசாங்கம் ,அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளால் உதவி ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட இப்போது உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துள்ளவர்கள்கூட உங்களை எதிர்கொள்ளத் துணிய மாட்டார்கள். . அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த சமயம் ஊதிய உயர்வு, பணிஉயர்வு கிடைக்கும். சொந்த ஊரை விட்டு வேற்றூரில் வேலைபார்த்துக்கொண்டு, குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றி உத்தரவு வரும். மேலதிகாரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் பாத்திரமாவீர்கள். அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். எடுத்த காரியங்களை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி திறமையாக செய்து முடிப்பீர்கள்.
கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில் மேன்மை ஏற்படும். புத்திர- புத்திரிகள் மேன்மை அடைவார்கள். புத்திர- புத்திரிகள் கல்வியில் ஏற்றம் அடைவார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது திருமணம் ஆகும். மாணவராக இருந்தால் தற்போது உன்னதமான நிலையை அடைவீர்கள். உங்களுக்கு அதிகாரமான பதவி ஒன்று கிடைக்கும். உங்களுடைய பராக்கிரமும் வீரதீரச் செயல்களும் மற்றவர்களால் பாராட்டப்படும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். ஆகவே இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும்..
அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். விரும்பிய புகழ், அந்தஸ்து கௌரவப் பதவிகள் முதலியவை அவர்களைத் தேடி வரும். மாணவர்களுக்கும் இது யோகமான காலம் என்றே கூறவேண்டும். படிப்பில் ஜொலிக்கும் காலம் இது.தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கேம்பஸ் செலக்ஷனில் தேர்வு பெற்று நல்லதொரு பணியில் அமர்வீர்கள்.சமூக அந்தஸ்தும் கௌரவமும் உயரும். களவு போன பொருட்கள் திரும்ப கைக்கு வரும். போலீஸ் உதவியுடன் திரும்ப வந்து சேரும். வேளீநாட்டு வேலையும் படித்த படிப்புக்குத் தகுந்தவண்ணம் கிடைக்கும். குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிலோ, அல்லது வெளியூரிலோ இருந்தால், விரும்பிய வண்ணம் இடமாற்றமும் தொழில் மாற்றமும் கிடைத்து, குடும்பத்துடன் இணைவீர்கள்.
ஏப்ரல் 2023க்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், குரு ஜென்ம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். பொதுவாக ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பது நல்லதல்ல. மனச் சஞ்சலங்களையும் உடல் அசௌகரியங்களையும் கொடுப்பதுதான் ஜென்ம குருவின் இயல்பு.
இடமாற்றம், பதவி மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும். எல்லாவற்றிலும் ஒரு மந்தமான போக்கு காணப்படும். வாக்குவாதங்கள் கலகத்தில் முடியும். வம்புச் சண்டைகள் தேடி வரும். கௌரவம் பாதிக்கப்படும். அலைச்சலும் அதிகமாக இருக்கும். உங்களுடைய போக்கிலும் செயல்களிலும் ஒருவித தளர்ச்சி ஏற்படும். மனதில் சலிப்பு இருந்துகொண்டே இருக்கும். சோர்வாகக் காணப்படுவீர்கள். உற்சாகமில்லாமல் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். மனம் அடிக்கடி துவண்டு போகும். சந்தேகம், கவலை, குழப்பம், வீண்பயம் போன்றவை உங்களை சூழ்ந்திருக்கும்.
முன்னேற்றத்தைப்பற்றிச் சிந்தித்தாலும் தெளிவான பாதை புரியாமல் திண்டாடுவீர்கள். தேக்கமும் தயக்கமும் உண்டாகும்.
சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே தடுமாறுவீர்கள். அதனால் கடன் தொகையை திருப்பி செலுத்துவது பற்றி உங்களால் யோசிக்கவே முடியாது. அதன் காரணமாக அவமானங்களையும் , வேதனைகளையும் சந்திக்க நேரும். மனக் கவலை சூழ்ந்தபடியே இருக்கும். . உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன்செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம். ஜென்ம குரு பொருளாதார வசதிகளைச் செய்து கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. வரவேண்டிய பணம் தடைப்பட்டு தாமதமாகக் கைக்கு வரும். வருவதும் முழுவதுமாக வராது. அரையும் குறையுமாக வந்து சேரும்.
வழக்கமான செலவுகளே மேலும் மேலும் அதிகரிப்பதால், பற்றாக்குறைப் பிரச்சினை ஏற்படுவதும் அவற்றைச் சமாளிப்பதுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கும். திடீர் நெருக்கடிகள் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். அதனால் கைமாற்று வாங்கப் போய் பணத்தை முன்னிட்டு கருத்து வேறுபாடு, ஏமாற்றம், இழப்பு முதலியவை ஏற்படும். உங்கள் கையில் இருக்கும் பணம் பறந்து செல்லத் துடிக்கும். முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்துங்கள்..
இந்த காலக் கட்டத்தில், பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள்பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
ஜென்ம ராசியில் குரு இருக்கும்போது ‘குருபலம்’ கிடையாது. பொதுவாக குருபலம் இருக்கும்போது சுபகாரியங்களுக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதிகம். குருபலம் இல்லாத சமயம் போதுமான பணம் புரட்டுவது, தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது, சட்டென்று சுபகாரியம் நடைபெறுவது இவற்றிலெல்லாம் இழுபறியாக இருக்கும். ஏற்கெனவே திருமணமான தம்பதியரிடையே குடும்ப நிர்வாகம் , பணப் பற்றாக்குறை சம்பந்தமான பிரச்சினைகள் அடிக்கடி எழும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலுவல் திணிப்பு அசௌகரியங்கள் என்று பலவாறாக தம்பதியரிடையே இணக்கம் குறையலாம். பிள்ளைகளைப் பற்றிய பொறுப்புகளும் பெரும் சுமையாக இருந்து கனத்துக்கொண்டிருக்கும்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வருவார்கள்.
இந்தஆண்டு சனி பகவான் ஏழரிச் சனியாக சஞ்சரிப்பதால், இந்த ஏழரைச் சனிக் காலத்தில் , தரித்திரம், நஷ்டம், பயனற்ற அலைச்சல், ஆகியவை உண்டாகும். வெகு தூரப் பயணங்கள் ஏற்படும். கட்டுக்கடங்காத அளவுக்கும், தகுதிக்கு மீறியும் செலவுகள் ஏற்படும். மனதில் எப்பொழுதும் சங்கடமும் கவலையும் இருந்துகொண்டே இருக்கும்.
வேலை இல்லாமை, அதனால் வருவாய் இல்லாத நிலை, எந்தத் தொழிலையும் செய்ய முடியாமை , செய்ய மனமில்லாமை, என்னும் இவை உண்டாகும். உள்ள பணமெல்லாம் பல வழிகளிலும் நஷ்டமாகும். மாரக தசை நடந்து, ஆயுர்த் தாயமும் ஆயுள் முடிவும் நெருங்கியிருந்து, இது மூன்றாம் சுற்று 7 1./2ச் சனியாகவும் அமைந்தால், உயிருக்கே கண்டம் ஏற்படலாம்.
மான பங்கம், கௌரவ பங்கம் போன்றவை ஏற்படும். சிந்தை தெளிவின்மையால், சரியான முடிவு செய்ய முடியாமல் எல்லாக் காரியங்களும் கெடும். மனைவி மக்களை விட்டுப் பிரிய நேரும். கால்நடை அழியும். விருப்பத்திற்கு மாறாக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்
பெண்களுக்கு: உடல் மற்றும் மனம் ரீதியான பாதிப்புகள் சற்று அதிகமாகவே இருக்கும். தேவையற்ற மனக் குழப்பம் போன்றவை வாட்டும். உங்கள் மனதைரியத்தை அசைத்துப் பார்க்கும். அதற்கு இடமளிக்காமல் தனித்து நின்று உங்கள் பயணத்தை தொடருங்கள். அப்போதுதான் சனியின் பாதிப்பு உங்களை அதிகம் வாட்டாது.
மாணவர்களுக்கு:சிற்சில சங்கடங்களையும் தடைகளையும் கல்வி அடிப்படையில் ஏற்படுத்தும். உடல்நலக் கோளாறு, அல்லது ஞாபக மறதி மற்றும் கல்வியில் ஆர்வமின்மை போன்றவை வழக்கம் போல ஏற்படவே செய்யும். நீங்கள் உங்கள் பங்கிற்கு அலுப்புடனும் உற்சாகமற்றும் கல்வியில் ஈடுபடுவதால், வெற்றி கனவாகி விடும். எதிர்பார்த்த மதிப்பெண் கிட்டாமல் போகும்.
புதிதாக வரும் நபர்களிடம் எதையும் மனம் விட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும். இல்லையேல் அவர்களால் உங்களுக்கு சில சிக்கல்கள் உருவாகககூடும்..
பரிகாரம்:
சனியின் சஞ்சாரம் சரியில்லையாதலால், சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றவு. வயதானவர்களுக்கும், உடல் ஊன முற்றவர்களுக்கும் தாராள்மாக உதவுங்கள். கருப்பு ஆடைகளைத் தானம் செய்யவும். உங்களுடைய ராசிக்கு ராகுவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். இந்தப் புத்தான்டு இனிய ஆண்டாக மலரட்டும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ. 950/= செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், www.moonramkonam.com@gmail.com என்ற வெப்சைட்டுக்குத் தொடர்புகொள்ளவும்]
*******************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)