Dec 122022
 

2023 புத்தாண்டு பலன்கள்:

சிம்மம்:

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ‘அஷ்டம குரு’வாக சஞ்சரிக்கிறார். அதன் பிறகு குரு 9ல் சஞ்சரித்து நற்பலங்களை வழங்குகிறார். சனி உங்கள் ராசிக்கு 7 ல் சஞ்சரிக்கிறார். ராகு 9-லும் கேது 3-லும் சஞ்சரிக்கிறார்கள்.
அஷ்டம குருவின் பலன்களைப் பார்த்தோமானால், அசுப பலன்களாகவே நிகழும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அஷ்டம குரு, முதலில் உங்கள் தாயாரின் உடல்நலத்தைப் பாதிப்பார். வண்டி வாகனங்களாலும், கால் நடைகளாலும் கஷ்டத்தை ஏற்படுத்துவார். உங்கள் உடல்நலம் பாதிக்கப்படும். நீங்கள் கட்டிக் கொண்டிருக்கும் கட்டடம் பண முடையினாலோ அல்லது எதிரிகளின் தொல்லையாலோ பாதியில் நின்றுவிடும். சிலர் தாங்கள் குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு வேறு வீட்டுக்கு குடியேறுவார்கள். சிலர் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்லநேரும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால், உடல்நலக் குறைவு ஏற்படும். சிலருக்கு ஓரிடத்தில் அமர்ந்து செய்யக்கூடிய பணியாக இல்லாமல் ஊர் ஊராக சென்று செய்யக்கூடிய பணியாக அமையும்
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com [
குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகள் குடியேறி யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். சில மாணவர்கள் கல்வியின் காரணமாகவோ அல்லது வேறு வேலை விஷயமாகவோ வெளியூர் சென்று தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் உள்ள வடயதானவ்ர்களுக்கு உடல் நல்ம் பாதிப்படையும் . அதனால், மருத்துவச் செலவு ஏற்படும். அவசியத் தேவைகளை விட்டுவிட்டு கேளிக்கை, பொழுதுபோக்குகளில் பணத்தைச் செலவழிப்பீர்கள். அதனால், அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் இல்லாமல் போய், குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும். பின்னர் கட்டாயத் தேவைகள் உருவாகிவிடுவதால், அத்ற்கு செலவழிக்க பணமில்லாமல் திண்டாடுவர். பணத்துக்காக அல்லாடும் சூழலை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். எனவே எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பி ரிஸ்க் எடுக்கவேண்டாம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும் சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர் அலுவலகப் பிரச்சினை காரணமாக வேண்டாத இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படுவார்கள். சிலர் அவர்கள் தகுதிக்கு தகுந்த வேலை அமையாமல், தகுதிக்கு குறைந்த வேலையில் அமர்த்தப்படுவர்.
. உடல்நலத்தில் கவனம் தேவை. கடுமையான நோய் பாதிப்புகள் இல்லையென்றாலும், அலர்ஜி, தோல் நோய்கள் போனறவை ஏற்படும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
தொழில் ரீதியான பின்னடைவுகளும் ,சில பாதிப்புகளும் ஏற்படும். தொழில், வியாபாரம் மந்த கதியை அடையும். அதன் காரணமாக பணப்புழக்கம் குறையும். பணத்தட்டுப்பாடு எல்லை மீறிப் போவதால், சிலர் தொழிலையே விட்டுவிடுவார்கள். அலுவலக வேலையில் உள்ளவர்களும் பிரச்சினையின் தீவிரத்தை தாங்கமுடியாமல், விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். சிலர் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் சிரமத்துக்கு ஆளாவார்கள். சிலர் போலித் தனமான ஜம்பத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். தந்தைக்கு உடல்நல பாதிப்புகளும் கண்டங்களும் ஏற்படக்கூடும். சகோதரனுக்கும் கண்டங்கள் ஏற்படும். அதுபோல உங்களுக்குமே கண்டங்கள் ஏற்படும். எனவே ஆயுஷ் ஹோமம் அல்லது மிருத்யஞ்ச்ய ஹோமம் இவற்றை செய்வதன் மூலம் ஆயுளுக்கு ஏற்படும் கணடங்களை தடுத்துக்கொள்ளலாம். இப்படி ஹோமம் செய்துகொண்டாலும் கூட தாய் அல்லது தந்தை வழியில் யாருக்காவது காரியம் செய்யவேண்டிவரும். உங்கள் வாழ்க்கைத் துணைவருக்கும் கண்டங்கள் ஏற்பட வழியுண்டு என்பதால், மேற்கணட ஹோமங்களை செய்துகொண்டால் , தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதுபோல ஆகும். புத்திர –புத்திரிகளுக்கும், மனைவிக்கும் கூட தோஷம் ஏற்படும். எனவே ஹோமம் செய்துகொள்வது அவசியம்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது
இந்த ஆண்டு, குரு பகவான் ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு உங்கள் பாக்கிய ஸ்தானமான 9-ம் இடத்தில் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாள் முதல், உங்களுக்கு யோகமான நேரம்தான். ஏராளமான பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். உத்தியோகத்தில் இருந்துவரும் எதிர்ப்பு, பிரச்சினை, சக ஊழியருடன் இருந்துவரும் விரோதமான போக்கு அத்தனையும் விலகும். குடும்பத்தில் குழப்பமும் , சண்டை சச்சரவுகளும் குறைந்து மகிழ்ச்சி, குதூகலப் பயணங்கள் என்று சந்தோஷம் தாண்டவமாடும். புதிய உறவினர் வருகை என்ற சூழ்நிலைகள் ஏற்படும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள். செய்து வரும் வியாபாரத்துடன் வேறு ஒரு வியாபாரத்தையுயும் இணைத்து மிகப் பெரிய லாபம் , வருமானம் ஈட்டும் நிலை உருவாகும். உத்தியோகத்தில் வரவேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு, , இடமாறுதல், வழக்கில் வெற்றி என்ற நிலை வந்து சேரும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக புதிய எந்திரங்கள் வாங்குவீர்கள். ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து தொழிலை விருத்தி செய்வீர்கள் கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்த கடன்தொல்லைகள் அவமானங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். கிரக நிலைகள் அனைத்தும் உங்களை உயர்த்தும் நிலையில்தான் அமைகிறது. நீங்கள் செய்யவேண்டியது வீண்பேச்சைக் குறைப்பது மட்டுமே. பிள்ளைகள் திருமணம் , படிப்பு, தொழில் என்று அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் , மனை அமையும். சிலருக்கு ஏற்கெனவே இருந்துவரும் குடுமப் பிரச்சினை, கணவன்-மனைவி கருத்துவேற்றுமைப் பிரச்சினை இவை நல்லோர் சிலரால், திடீரென மாறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாள் இருந்துவந்த கடன் பிரச்சினையை தீர்த்து நிம்மதி அடைவீர்கள். கோர்ட் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். எதிராக இருந்துவந்த ஊழியர்கள் அனுசரணையாவார்கள். வியாபாரம் பெருகும். முதலீடு குறைவால், வியாபாரம் படுத்துப் போனவர்களுக்கு திடீர் என அறிமுகமாகும் பெரிய மனிதர்களால் படுத்துப்போன வியாபாரமும் எழுந்து நின்று விடும். சிலர் வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்வர். எந்த வேலையும் தெரியாத படிப்பறிவற்றோருக்குக்கூட ஜீவனத்துக்கு ஏதாவதொரு வேலை கிடைத்து பிழைப்பைப் பார்த்துக்கொள்ள முடியும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். வெளிநாடு சென்று படிக்க யோகம் கிடைக்கும். டாக்டர், சாஃப்ட்வேர் எஞ்சினியர், வெல்டர் என்று வேலையில் சேர ஆசைப்பட்டவர்களுக்கு இப்போது நேரம் கூடி வரும். அடிக்கடி மருத்துவ செலவு செய்துகொண்டிருப்பவர்கள், பூரண நிவாரணம் பெறுவர். கணவன்-மனைவி பிரச்சினை தீரும். மனைவியின் நகையை அடகுவைத்துவிட்டு விழித்துக்கொண்டிருந்தவர்கள இப்போது பொருளாதார முன்னேற்றமடைந்து மீட்டுக் கொடுப்பது மட்டுமல்லாமல் அதனால் ஏற்பட்ட பிணக்கும் தீரும். இதுவரை தள்ளிப்போன திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
[ இந்த புத்தாண்டு பலன்களை உங்களுக்காக வழங்குவது moonramkonamkonam.com]
மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக, வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும. சனி பகவான் 7-ம் இடத்தில் சஞ்சரிப்பது உகந்தது அல்ல. பலன்கள் எப்படி இருக்கும்?
குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். சிலருக்கு சிறைவாசமும் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயர்ச்சிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
ராகுவின் 9-ம் இட சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுக்கும். தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தையும் தந்தை வழி உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அலைச்சல்கள் அதிகமாகும். வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ளோருடன் வர்த்தக உறவுகள் ஏற்பட்டு சிலருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் வேற்று இன, மதத்தினரும் வேற்றுமொழி பேசுபவர்களும் உதவியாக இருப்பார்கள். வெளிநாட்டு வர்த்தகம், நூதனமான பொருட்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு மேன்மை ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் செய்வோருக்கு இது ஏற்றமான காலம். ஒரு கணிசமான தொகையை சம்பாதிப்பார்கள். ஆன்மீக சிந்தனைகள் உங்களுக்கு அதிகமாகி, வேதாந்த புராண விஷயங்களில் நாட்டம் அதிகமாகும். கோவில் மடாலயம் போன்ற இடங்களில்கௌரவப் பதவிகளும் பொறுப்புகளும் கிடைக்கும். பெரியோர்கள் , ஞானிகளின் தரிசனமும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அவர்களால் கொரவிக்கப்படுவீர்கள். சிலர் தீர்த்த யாத்திரை, கோயில் குளங்களுக்கு செல்லுதல் புனிதப் பயணம் போன்ற ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்துக்கள் மேன்மையடையும். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் நன்மையும் கிடைக்கும். சிலருக்கு அவரவர் பிறந்த ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றம் ஏற்படும். சிலர் தர்ம நியாயங்களுக்கு மாறாக செயல்பட்டு பணம் தேடவும் செய்வார்கள். அதன் காரணமாக அவர்கள் பணமே பிரதானமாய் கேவலமாய் அலையவும் வாய்ப்புண்டு. இந்த நிகழ்வுகள் ஜாதகத்தில் 9-ம் இடத்தில் தீய கிரகங்கள் இருந்தால் ஏற்படும்.
இந்தக் காலத்தில் உங்கள் எதிரிகளும், உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களும்கூட உங்கள் செயல்திறனைக் கண்டு உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் . அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரியின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். சக ஊழியர்களும் ஒத்துழைப்பு தருவார்கள். அலுவலகத்தில்சுமுகமான சூழ்நிலை ஏறபடும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிஇனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். 3-ம் இடத்தில் பயணம் செய்யும் கேது நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கத் தயங்க மாட்டார். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அத்தனையும் வந்து சேரும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்புகளும் அவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும். உங்களுக்கு அதிகார பதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். சிலர் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவர். மனோபலம் அதிகரிக்கும். எந்தப் பிரச்சினையானாலும் துணிவுடன் எதிர்கொள்வீர்கள். சிலருக்கு விதவைப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு தொல்லையில் முடியும். எனவே தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத திடீர் வருமானம் கிடைக்கும். முயற்சி எதுவுமின்றியேகூட உங்களுக்கு இப்போது வருமானம் வரும். இந்தக் காலத்தில் நீங்கள் மண்ணைத் தொட்டாலும் அது பொன்னாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றியே உண்டாகும். சிலர் மத விஷ்யங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு அதன்மூலம் பெரும் புகழடைவார்கள். ஆனால், சிலர் அதையே பயன்படுத்திக்கொண்டு தீய வழிகளில் பணம் சம்பாதிக்கத் துணிவார்கள். அப்படிப்பட்ட வழிகள் பாதிப்பைத் தரும் என்பதால் அவைகளைத் தவிர்க்கவும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கமும் பிரச்சினைகளும் தீரும். பூர்வீகச் சொத்தினால் நல்ல லாபம் கிடைக்கும். புத்திர புத்திரிகள் மேன்மையடைவார்கள். புத்திர புத்திரிகளுக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் அவர்கள் நலல் முன்னேற்றத்தை அடைவார்கள். குலதெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். மேலும்,. கேதுபகவான், தனது 11-ம் பார்வையினால் உங்கள் ராசியையே பார்க்கிறார். இதனால் மனோபலம் கூடும். எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் முதலில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அது விலகிவிடும். சாதனை வீரராக வலம் வருவீர்கள்.
கேது பகவானின் 3-ம் இட சஞ்சாரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல காலத்தின் தொடக்கம் ஆகும். இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த தொல்லை, துயரம் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த நோய் நீங்கி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பெருகும். மருத்துவச் செலவுகள் குறையும். பணம் பல வழிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கும். செலவினங்கள் அதிகமாகும் வாய்ப்புகளும் உண்டு. கவனத்துடன் இருந்தால் உன்னத நிலையை அடைய முடியும். நல்ல நண்பர்களும் உங்களது நலம் விரும்பிகளும் உங்களுக்கு தக்க சமயத்தில் தக்க ஆலோசனைகளைச் சொல்லி உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி நிறையும்.
பரிகாரம்:
குருவின் சஞ்சாரம் சரியில்லையாதலால் வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை கொண்டக் கடலை மாலாலை சாத்தி வழிபடவும். .
*********************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)