Dec 112022
 

2023 புத்தாண்டு பலன்கள் :


துலாம் ராசி:

இந்த புத்தாண்டில் 2023 ஏப்ரல் மாதம் வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால், இது யோகமான சஞ்சாரம் என்று சொல்ல முடியாது. இந்த சஞ்சாரத்தினால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். அதன் காரணமாக அவமானங்களும் , மனக் கவலையும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு கல்லீரல், கணையம்,மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு , போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
இப்போது உங்களுக்கு ‘குருபலம்’ இருக்காது. திசா புத்திப்படி இருந்தாலும், அது சுபபலனாக இருக்காது. எனவே திருமணத் தடங்கல்கள் ஏற்படும். திருமணம் தள்ளிப்போகும். குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகம் அமையாது. பிள்ளைகள் வழியிலும் உங்களுக்கு நிம்மதியான சூழ்நிலை இருக்காது. பிள்ளைகள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. அவர்களுடைய வேலை வாய்ப்பும் இழுபறியாகவே இருக்கும். நல்ல நிலையில் உள்ள பிள்ளைகள்கூட உங்களைக் கவனிக்கமாட்டார்கள். மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு, உங்களை அலட்சியம் செய்துவிட்டு, மனைவி வீட்டோடு போய்விடக்கூடிய சூழ்நிலையும்கூட ஏற்படும். பிள்ளைகள் வழியில் மனக்கவலைதான் மிஞ்சும்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம்.
பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேணடிய பணத்தை, கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், குடும்பத்தாரின் அவசியமான தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும். அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமாதானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.
பிரதோஷ காலங்களில் சிவன் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபட்டால், தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் 1 வருட காலம் சஞ்சரிக்கப் போகிறார். குரு பகவான் தன்னுடைய புனிதமான 5-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தையும், 7-ம் பார்வையால் உங்களுடைய ராசியையும் , தன்னுடைய 9-ம் பார்வையால் உங்களுடைய 3-ம் இடத்தையும் பார்வையிடுகிறார். இதன்காரணமாக இந்த இடங்கள் எல்லாம் வலிமையடையும்.
குருவின் 7-மிடத்து சஞ்சாரம் உங்களுக்கு சகல சம்பத்தையும் அளிக்கும். முகம் ஒளி பொருந்தியதாக இருக்கும். முகத்தில் தேஜஸ் ஏற்படும். உடல் நலம் பெறும். இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்துவந்த உங்களுடைய திறமைகள் இப்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து பலருடைய பாராட்டுக்கும் ஆளாவீர்கள்.
சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். சிலருக்கு கௌரவப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எண்ணங்களில் உயர்வும் மேன்மையும் இருக்கும். கௌரவம், அந்தஸ்து மேலோங்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்றி நீங்கள் நாணயமிக்கவர் என்று அனைவராலும் அறியப்படுவீர்கள
தொழில், வியாபாரம் மேன்மையடையும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் தேவைக்கேற்ற வருமானம் பெருகும். பொருளாதார நிலை சீரடையும்.
அலுவலகப் பணியாளர்களுக்கு இது ஒரு சிறப்பான காலம். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வெளியூரில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாகி வர வாய்ப்பு உருவாகும். சிலருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.. உங்களை அனைவரும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள். வீட்டிலுள்ளவர்களின் தேவைகளை காலம் அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இதன் காரணமாக குடும்பத்தாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமாவீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
மாணவர்கள் கல்வியில் மேன்மையடைவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். வேலை தேடிக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில், கல்விக்கேற்ற ஊதியம் கிடைக்கும். திருமணத்துக்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். மனம் விரும்பும் வண்ணம் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும். குழந்தை இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையடைவார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடங்களில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அவர்கள் புதிய தொழில் தொடங்குவார்கள். புத்திர-புத்திரிகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைப்பட்டிருக்குமானால், தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நடந்தேறும்.
சிலருக்கு கோயில் கட்டுவதற்கான பொறுப்புகளும், கோயிலில் கௌரவப் பதவிகளும் பாராட்டுகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தெய்வ காரியங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் விட்டுப்போன குலதெய்வ வழிபாட்டைத் தொடருவார்கள். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சிலர் கோயில் கட்டும் பணியில் பங்கு பெறுவார்கள்.சிலருக்கு தீர்த்த யாத்திரை , புனிதப் பயணம் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை உங்களுக்கு வருத்தம் அளித்துவந்த கோர்ட் கேஸ்கள் இப்போது முடிவுக்கு வரும். அந்த வழக்குகளின் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கீழ்க்கோர்ட்டில் தண்டனை பெற்ற சிலர் மேல்கோர்ட்டில் விடுதலையாவார்கள். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் கிடைக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள்.
பொருளாதார மேம்பாடு இருக்கும். விரயச்செலவு குறையும். குடும்பத்தில் இருந்துவந்த வீண்வாக்குவாதங்கள் குறையும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் தாண்டவமாடும். வாழ்க்கத் துணையின் உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தாயார் உடல் நலம் சிறக்கும். தாய் வழியில் சில உதவிகளும் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தையும் மேன்மையடைவார். தந்தையின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அரசு அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும்நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு பழைய கடன்கள் அடைபடும். புதிதாக வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியம் பெறும். மருத்துவச் செலவு குறையும். எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய மேம்பாட்டுக்கே வழிவகுக்கும்.
சிலருக்கு பொருளாதாரப் பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பிரச்சினைகள் மீண்டும் தொடங்கி நடக்கும். அதற்கான வங்கிக்கடன் எளிதாகக் கிடைக்கும். சிலர் வீடு மனை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை கிணற்றில்போடப்பட்ட கல்லாக மறைந்துகிடந்த பிரச்சினைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக தீர்க்கப்படும்.
தற்போது ராகு-கேது பெயர்ச்சி நற்பலன்களை வழங்காது சனியின் 5-மிட் அசஞ்சாரமும் ஏற்றம் தராது..
பரிகாரம்:
வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று, கொண்டக்கடலை மாலையும், மஞ்சள் மலர் மாலையும் சாத்தி வழிபட்டால், துன்பம் விலகும்.சனிக் கிழமைகளில் சனீஸ்வரனை எள் தீபம் ஏற்றி வழிபோடவும். வெள்ளிக்கிழமைகளில் துர்கையம்மனை சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்யவும். வினாயகர் கொவிலுக்கு சேவை செய்யவும்.
வாழ்க வளமுடன்!
#################
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
^^^^^^^^^^^^^^^^^^^^^^

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)