Dec 112022
 

2023 புத்தாண்டு பலன்கள்


ரிஷபம்:


இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை குருபகவான் லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு சாதகமான சஞ்சாரம் என்பதால், நற்பலன்களாக நிகழ்ந்து வரும். ராகு-கேது முதலிய கிரகங்கள் உங்கள் ராசிக்கு12 மற்றும் 6 -மிடங்களில் சஞ்சரிக்கிறார்கள். ராகுவின் சஞ்சாரம் நற்பலன்கள் வழங்காது கேதுவின் சஞ்சாரம் நற்பலன்களைக் கொடுக்கும். சனியின் 9-மிட சஞ்சாரமும் சிறப்பாக அமையாது..
இந்த் வருடம் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம் தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள், நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தனமை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை ,வருத்தம் யாவும் அகலும். குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள், தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், நிறைவேற்றுவீர்கள். சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
. எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் –மனைவி உறவு சிறக்கும். கருத்துவேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகல சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும்.
இப்போது உங்கள் பொருளாதாரம் முன்னேற்றமடையும்.திருமணங்கள் இப்போது நல்லபடியாக முடிவடையும்.
இந்த வருடம் 2023 ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடமான ‘விரய ஸ்தான’த்தில் சஞ்சரிப்பதால், குரு உங்களுக்கு ‘விரய குரு’வாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பனிரண்டாம் வீடு என்பது விரய ஸ்தானம் என்பதால் தர்ம காரியங்களுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
பிரயாணங்களால் அலைச்சலும் சிரமங்களும் ஏற்படும்.
தவறிக் கீழே விழுவதால் கைகள் அல்லது கால்களில் சிறு காயங்கள் ஏற்படும். இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் உண்டாகலாம்.
பொதுவாக குரு பகவான் பனிரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும்போது மனதில் ஊக்கம் மிகக் குறைவாக இருக்கும். அடிக்கடி அலுப்பும் சலிப்பும் ஏற்படும். எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாது. அதன் காரணமாக அவமானங்களும் , மனக் கவலைகளும் சூழ்ந்தபடியே இருப்பர். உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. மேலும் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை வியாதி ,செரிமானக் குறைவு ,மன அழுத்தம் , கண் தொடர்பான நோய்கள் போன்றவற்றில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீணான மருத்துவச் செலவுகள் ஏற்படும். பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். சிலருக்கு நுரையீரல் வயிறு மற்றும் கண்களிலும் கோளாறு ஏற்படும். மயக்கம் கிறுகிறுப்பு உண்டாகும். போதை வஸ்துக்களின் பழக்கமும் ஏற்படும். எனவே ஏதாவது தீய பழக்கவழக்கங்கள் இருப்பின், இந்த ஆண்டு முழுவதும் விட்டுவிடுவது நல்லது. அப்போதுதான் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால், சின்ன செலவுகளிலேயே முடிக்க வேண்டிய விஷயங்களைக்கூட உங்கள் விரக்தி, மனக் குழப்பங்களின் மூலம் போதைப் பழக்கத்தில் மாட்டி, மருத்துவச் செலவை மிகவும் பெரிதாக்கி பணத்தை செலவழிப்பீர்கள்.
வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தை கவனத்துடன் பார்த்துக்கொள்வது நல்லது. நண்பர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக்கொண்டால்தான் நட்பு பகையாக மாறாமல் தடுக்கலாம். பணம் வரும் வழி அத்தனை எளிதாக இருக்காது. தொழில், வியாபாரம் மந்தமாக இருப்பதனால் இந்த பொருளாதார மந்தநிலை ஏற்படும். உங்களுக்குப் பணம் கொடுக்கவேண்டியவர்கள் கொடுக்காமல் கால தாமதப்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் கொடுக்க வேண்டி பணத்தை கொடுத்தவர்கள் உங்களைத் துரத்தித் துரத்தி வந்து உங்களைப் பணம் கேட்பார்கள். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுத்தால் நீங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். நாணயமற்றவர் என்ற அவப்பெயர் வரக்கூடும். குறைவான வருமானத்தால், அதன் காரணமாக குடும்பத்தினருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாட்டில் முடியும். எனவே சமானப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும. அதை விட்டுவிட்டு உங்கள் நிலைமையை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்ற ரீதியில் பேச ஆரம்பித்தால், சண்டைதான் வரும்.
மனைவி வகையில் செலவுகள், பிள்ளைகளைப் பராமரிப்பதால் ஏற்படும் செலவுகள் ,செலவுகள் போன்றவற்றிற்காகவும் நீங்கள் அதிகமாகப் பணம் ஒதுக்க வேண்டியிருக்கும். வீடு கட்டுதல், சொத்துக்களை விருத்தி செய்தல், குடும்பத் திருமணத்தை கோலாகலமாக நடத்துதல் போன்ற பயனுள்ள செலவுகள் பணத்தை வேகமாகக் கரைக்கும். நண்பர்களுடன் சுற்றுபவர்கள், உல்லாச பேர்வழிகள் போன்றவர்கள் கட்டுப்பாடாக இல்லாவிட்டால் கையில் இருப்பதைத் தொலைத்துவிட்டுக் கடனாளியாகி விடுவார்கள். சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு நிறைய செலவு செய்வார்கள். புதிதாக வீடு கட்டுதல், மனை வாங்குதல் போன்றவற்றிற்காக சிலர் பெரிய தொகைகளை கடன் வாங்கவும் செய்வார்கள். நகை நட்டுகளை அடமானம் வைத்துப் பணம் புரட்டவும் செய்வார்கள். இப்படியாக விரய குரு கொடுக்கும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வழியில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் கடன் எல்லை தாண்டிவிடும். அவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களைவிட்டு விலகிப் போவார்கள்.முடிந்தவரை கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இப்போது கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வராது. அதனால் பல சங்கடங்களும் சஞ்சலங்களும் ஏற்படலாம். பெருந்தொகையை மற்றவர்களிடம் கொடுத்து அனுப்புதலும் கூடாது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். ஊதிய உயர்வுகள் தட்டிப் போகும். மேலதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாகும் சூழ்நிலைகள் அடிக்கடி உருவாகலாம். அதனால் பதவி உயர்வுகள் பாதிக்கப்படும். அதனால் ஊதிய உயர்வுக்கு வழியின்றிப் போகும். சிலருக்கு விருப்பமில்லாத பணிமாற்றம் ஏற்படலாம். அதனால் இரண்டு இடத்தில் குடும்பம் வைக்க வேன்டியதால், விரயச் செலவு ஏற்படும். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவார்கள். வரவேண்டிய பணிஉயர்வுகள் தாமதப்படலாம். வீடு வாகனங்கள் விரயச் செலவைக் கொடுக்கும். உங்கள் மதிப்பும் புகழும் குறையக்கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்காமல் போகும்.
குரு உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால், குரு ஜென்ம குருவாகிறார். அதனால், சில பாதிப்புகள் தோன்றலாம். எதுவும் உங்கள் ஜாதகப்படி அமையும் என்பதால், அதையும் கணக்கில் கொள்ளுங்கள். பொதுவாக ஜென்ம ராசியில் குரு சஞ்சரிப்பது நல்லதல்ல. மனச் சஞ்சலங்களையும் உடல் அசௌகரியங்களையும் கொடுப்பதுதான் ஜென்ம குருவின் இயல்பு.
இடமாற்றம், பதவி மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை ஏற்படும். எல்லாவற்றிலும் ஒரு மந்தமான போக்கு காணப்படும். வாக்குவாதங்கள் கலகத்தில் முடியும். வம்புச் சண்டைகள் தேடி வரும். கௌரவம் பாதிக்கப்படும். அலைச்சலும் அதிகமாக இருக்கும். உங்களுடைய போக்கிலும் செயல்களிலும் ஒருவித தளர்ச்சி ஏற்படும். மனதில் சலிப்பு இருந்துகொண்டே இருக்கும். சோர்வாகக் காணப்படுவீர்கள். உற்சாகமில்லாமல் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். மனம் அடிக்கடி துவண்டு போகும். சந்தேகம், கவலை, குழப்பம், வீண்பயம் போன்றவை உங்களை சூழ்ந்திருக்கும்.
முன்னேற்றத்தைப்பற்றிச் சிந்தித்தாலும் தெளிவான பாதை புரியாமல் திண்டாடுவீர்கள். தேக்கமும் தயக்கமும் உண்டாகும்.
சிலருக்கு கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே தடுமாறுவீர்கள். அதனால் கடன் தொகையை திருப்பி செலுத்துவது பற்றி உங்களால் யோசிக்கவே முடியாது. அதன் காரணமாக அவமானங்களையும் , வேதனைகளையும் சந்திக்க நேரும். மனக் கவலை சூழ்ந்தபடியே இருக்கும். . உங்களுடைய பிள்ளைகள் மேன்மையாக இருந்தாலும்கூட அவர்களுடைய கவலைகள் உங்களை வாட்டிக்கொண்டே இருக்கும். சிலரது குடும்பத்தில் ஏற்படும் சுபநிகழ்ச்சிகளுக்காக பணம் திரட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். உங்களுக்காகவோ உங்களுடைய பிள்ளைகளுக்காகவோ வேலை வாய்ப்புக்காகவோ வேறு ஏதாவது முயற்சிகளுக்காகவோ யாரையாவது நம்பி முன்கூட்டியே பணம் கொடுத்தால் ஏமாற்றமே மிஞ்சும். கொடுத்த பணமும் திரும்ப கைக்கு வராது. அதனால், இது போன்ற விஷயங்களுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இழப்புகளைத் தடுத்துக்கொள்ளலாம். ஜென்ம குரு பொருளாதார வசதிகளைச் செய்து கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. வரவேண்டிய பணம் தடைப்பட்டு தாமதமாகக் கைக்கு வரும். வருவதும் முழுவதுமாக வராது. அரையும் குறையுமாக வந்து சேரும்.
வழக்கமான செலவுகளே மேலும் மேலும் அதிகரிப்பதால், பற்றாக்குறைப் பிரச்சினை ஏற்படுவதும் அவற்றைச் சமாளிப்பதுமே இயல்பாக நடந்துகொண்டிருக்கும். திடீர் நெருக்கடிகள் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். அதனால் கைமாற்று வாங்கப் போய் பணத்தை முன்னிட்டு கருத்து வேறுபாடு, ஏமாற்றம், இழப்பு முதலியவை ஏற்படும். உங்கள் கையில் இருக்கும் பணம் பறந்து செல்லத் துடிக்கும். முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்துங்கள்.
இதையெல்லாம் படித்துவிட்டு பயந்துபோய்விட வேண்டாம். இந்த ஓராண்டுக் காலத்தை எப்படி கழிக்கப் போகிறோம் என்று பயந்துவிட வேண்டாம். உங்கள் பலம் உங்களுக்குத் தெரியாது. எல்லாவகையான சிக்கல்களையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான். எதைச் செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள். செலவுகளைச் சுருக்கி சிக்கனமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.உங்களுக்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
இந்த காலக் கட்டத்தில், பொதுவாக உங்கள் மனத்தில் விரக்தி குடிகொண்டிருக்கும். எந்த விஷயத்திலும் விரைவாக முடிவெடுக்க முடியாமல் மதி மயக்கம் ஏற்படும். அப்போது மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக முடிவெடுப்பது நல்லது. இந்த நிதானம் தவறாக முடிவெடுப்பதைத் தவிர்த்து உங்களை அந்த விஷயத்தில் காப்பாற்றும். தேவையற்ற விஷயங்களிலும் அடுத்தவ்ர் விஷயங்களிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிரிகளாலும், போட்டியாளர்களாலும் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.,
உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய நீங்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உங்களிடம் உதவி பெற்றுவரும் நண்பர்களும் உறவினர்களும்,இப்போது உங்களுக்கு உதவ முடியாமல் போகும்.

ராகு கேது பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 12ம் இடத்திலும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 6ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
ராகுவின் 12ம் இடத்து சஞ்சாரம் உங்களுக்கு அதிக அலைச்சலையும் பயணங்களையும் கொடுக்கும். வேலைப்பளு கூடும். உறக்கம் குறையும். சிலர் குடும்பத்தை விட்டு வெளியூரில் தங்க நேரும். அதிக செலவு ஏற்பட்டு மனக்கஷ்டங்கள் தோன்றும். மறைமுக எதிரிகளால் எப்போதும் தொல்லைகள் இருந்துகொண்டே இருக்கும். ஆனாலும் அவர்கள் எதிர்ப்பு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. ராகு பகவான் தனது 11ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தைப் பார்ப்பதால், தொழில் ரீதியாக சில பின்னடைவுகள் ஏற்படும். உற்பத்திப்பொருட்கள் விற்பனையின்றி தேங்கிக் கிடக்கும். உங்களிடம் கடன் பெற்ற வியாபாரிகளிடமிருந்து பணம் திரும்பக் கைக்கு வராது. குடும்பத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டு மறையும். குடும்பச் செலவுகளுக்குத் தேவையான பணம் இல்லாமல் போகும்.
கேது பகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தின்மூலம் நற்பலன்களாக நிகழும். உங்கள் ராசிக்கு குரு பகவானின் நற்பலன்களும் கூடுவதால், ராகுவின் தீய பலன்கள் பெருமளவுக்கு குறைய வாய்ப்புள்ளது. கேதுவின் சஞ்சாரம் தக்க முறையில் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்துவந்த போட்டியாளர்களையும் எதிரிகளையும் அழிக்கும். பழைய கடன்கள் அடையும். அதே சமயம் தொழிலைப் பெருக்க எதிர்பார்த்த புதிய கடனுதவி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் .எதிர்பாராத திடீர் பண வரவு கிடைக்கும். மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. உங்கள் செல்வாக்கு உயரும். தாராள பணப்புழக்கம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல நிலைமை ஏறப்டும். எடுக்கும் காரியங்கள், செய்யும் முயற்சிகள் அனைத்திலும் உங்கள் புதிசாலித்தனத்தின்மூலம் வெற்றியடைவீர்கள். அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் ,மக்கள் பணி புரிபவர்கள் ஆகியோர் மேன்மையடைவார்கள். அரசியலில் இருப்பவர்கள் பிரபலமாகும் வாய்ப்புள்ளது. சிலர் வீடு மனை வாங்குவார்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். பூர்வீகச்சொத்து மேன்மையடையும். கேதுபகவானின் 6ம் இடத்து சஞ்சாரத்தால், மனதிற்குள் அசாத்திய துணிச்சல் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்புடனும் புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்டு வெற்றியை அடைவார்கள்.
பரிகாரம் :
பிரதோஷ காலங்களில் கோவிலுக்குச் சென்று சிவனை வழிபடுவது துன்பங்களை விரட்டும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை மஞ்சள் மலர்களாலும், கொண்டக்கடலை மாலை சாத்தியும் வழிபடுங்கள். சனிக் கிழமைகளில் சனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று எள்தீபம் ஏற்றி சனீஸ்வரனை வழிபடுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையம்மனை சிவப்பு மலர்கொண்டு வணங்கவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
[ உங்கள் பிறந்த ஜாதகத்துக்குரிய விரிவான பலன்களை ரூ.950/- செலுத்தி, தெரிந்துகொள்ள விரும்புவோர், moonramkonam@gmail.com என்ற வெப்சைட்டை தொடர்பு கொள்ளவும்.]
*****************************************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)