Dec 132022
 

2023 புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம்:

இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-மிடத்தில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் ஏப்ரல் மாதம் வரை 5-மிட சஞ்சாரம் செய்கிறார். சர்ப்பக் கிரகங்களான ராகுவும் கேதுவும் உங்கள் 6 மற்றும் 12-ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள். இனி பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த ஆண்டில், ஏப்ரல் மாதம் வரை குரு பகவான் 5-மிட சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரம் உங்களுக்கு நற்பலன்களைக் கொடுக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்களால் நன்மை உண்டு. அலைச்சல்கள் குறையும். நல்ல உடை மற்றும் அணிகலன்களை அணிந்து மகிழ்வீர்கள். சிலர் புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும், புத்தி சாதுர்யத்துடன் வெற்றிகரமாக முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரால் உங்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும். மனோபலம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைத்து உங்கள் நட்பு வட்டம் பெரிதாகும். அடகு வைத்த நகைகளை மீட்பதுடன், புதிதாக ஆபரணங்களும் வாங்குவீர்கள். சிலருக்கு கௌரவப் பட்டங்கள் ,பதவிகள் கிடைக்கும். தவறிப்போன் குலதெய்வ வழிபாடு இப்போது நடைபெறும். சிலர் குலதெய்வத்திற்கு கோவில் கட்டுவார்கள். கோவில் தர்மகர்த்தா பதவி கிடைக்கும். பெரியோர் ஞானிகள் மற்றும் சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் தேவையான உதவிகள் செய்வார்கள். இந்த சமயத்தில் இளைய சகோதரர்களும் உதவியாக இருப்பார்கள் .
ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்துக்கும் கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கும் சென்று அமர்கிறார்கள். அதன்மூலம் பொதுவாக உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்தொழில் மேன்மையடையும். அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைபடும். இதுவரை உங் களுக்கு தொல்லைகொடுத்துவந்த எதிரிகளும் போட்டியாளர்களும் காணாமல் போவார்கள். அவர்களால் நிலவி வந்த தொல்லை நீங்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்படையும். அதே நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள், வாயுத் தொந்தரவு, வயிறு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படும். நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவினர்களிடமிருந்து உங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பும்.
எதிர்பாராத வருமானம் கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். ஆனால் அவை நிரந்தரமாக இருக்காது. கோர்ட் கேஸ்களால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு சாதகமான தீர்ப்புகளும் கிடைக்கும்.
உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புண்டாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். புத்தி சாதுரியம் அதிகரித்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளை முறியடித்துவிடுவீர்கள் . அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் அமர்ந்து, உங்களுக்கு மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கிறார். இது உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். விரயச் செலவுகள் குறையும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போருக்கு இப்போது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். சிலர் வெளிநாட்டுக்கு மகிழ்ச்சி சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலர் காசி ராமேஸ்வரம் செல்வார்கள். சிலர் கடமைகள் அத்தனையும் முடித்துவிட்டு குடும்பப் பொறுப்புகளிலிருந்து அமைதியாக ஒதுங்கி இருப்பார்கள். சிலர் ஏகாந்தமான மோன நிலைக்கு செல்வார்கள். ஞான நிலையும் சித்திக்கும். தியானத்தை மேற்கொள்வார்கள். தொழிலில் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கக்கூடும்.
[இந்த புத்தாண்டு பலன்கள் ‘ moonramkonam.com என்ற வெப்சைட்டிலிருந்து வழங்கப்படுகின்றது]
அர்த்தாஷ்டம சனியாக சனி பகவான் சஞ்சரிக்கும் இந்த சமயத்தில் எதற்காகவும் யாருக்காகவும் வாக்கு கொடுக்க வேண்டாம். அந்த வாக்கை காப்பாற்ற மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். யாருக்காவது ஜாமீன் கொடுத்து அந்தக் கடனை நீங்கள் அடைத்து கஷ்டப்படுவீர்கள். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்பட்டு, அவைகளை குடும்பத்தினரே சமாளித்துக்கொள்வார்கள். கல்வியில் ஏற்படும் தடைகளை சமாளித்து எப்படியும் உங்கள் நிலையைத் தக்கவைத்துக்கொள்வீர்கள். செலவுகள், விரயச் செலவுகள் ஏற்படும். வெளிநாட்டு வேலை கிடைத்து குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரும். அலைச்சல்கள் அதிகமாகும். தாயாரின் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். மருத்துவச் செலவுகளும் விரயச் செலவுகளும் ஏற்படும். தாயாதி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சிலர் தங்கள் தேவை கருதி பழைய வாகனத்தை வாங்குவார்கள். அந்த வாகனங்களை ரிப்பேர் பண்ணிப் பண்ணியே விரயச் செலவுகளில் மாட்டிக்கொள்வீர்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் மற்றும் உறவினர்களின் வருகை அதிகரிக்கும். இது உங்களுக்கு செலவுகளை அதிகரிக்குமே தவிர மகிழ்ச்சியைக் கொடுக்காது. தற்போது நீங்கள் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் புத்திசாலித்தனம் இப்போது உங்களுக்கு கை கொடுக்காது. தேவையில்லாத வம்பு வழக்குகள் உங்களைத் தேடிவரும். சிலர் புத்திரர்களால் கவலைப்பட நேரும். அவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் திருமணம் போன்ற சுப காரியங்களில் தடை ஏற்படும்.சிலர் சொந்த பந்தங்களை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள். தாயாரின் உடல்நலம் மோசமடையும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
இந்த் ஆண்டு குரு உங்கள் ராசிக்கு 6-மிடத்துக்கு செல்கிறார். பலன்கள் நன்றாக அமையாது.
இந்த் ஆண்டு குரு உங்கள் ராசிக்கு 6-மிடத்துக்கு செல்கிறார். பலன்கள் நன்றாக அமையாது.
குடும்பத்திற்காக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பொறுப்புகள் அதிகமாவதால், உங்களை டென்ஷனாக்கும். உங்கள் டென்ஷனை நீங்கள் பேச்சிலும் காட்டி, குடும்பத்தினர், நண்பர்கள் என்று அத்தனை பேரின் வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வீர்கள். அவர்களுடன் சண்டை சச்சரவுகளும் உண்டாகும். வருமானக் குறைவு ஏற்படும். அந்த வருமானத்தை ந்ம்பி எந்த செலவுகளையும் மேற்கொள்ள முடியாது. பணப் பற்றாக்குறையின் காரணமாக குடும்பத்தில் ஏற்படும் அவசியத் தேவைகளைக்கூட உங்களால் நிறைவேற்ற முடியாமல் போவதுடன் இதன் மூலம் குடும்பத்தாரின் கோபத்துக்கும் ஆளாவீர்கள். திடீரென எதிர்பாராத வருமானம் வந்தாலும் உங்களால் அத்தனை செலவுகளையும் ஈடுகட்ட முடியாது. அதிக தேவைகளை சமாளிக்க முடியாமல் போவதால், உங்களால் நியாயமான முறையில் நடக்க முடியாமல் போகும். பொய் புரட்டுகளில் ஈடுபடவேண்டிய கட்டாயம் ஏற்படும். உடல் நலம் குறையும் முக்கியமாக கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். புத்திர-புத்திரிகளுக்கும் சில தொல்லைகள் வரலாம். அவர்கள் தங்கள் கல்வி வேலை வாய்ப்புகளைக் காத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டியிருக்கும். அடிக்கடி பயணம் மேற்கொள்வீர்கள். ஆனால் பயணங்களால் வருமானம் எதுவும் கிடைக்காது. கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சண்டை சச்சரவுகள்உண்டாகும். குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிந்திருக்கவேண்டியிருக்கும். நீங்கள் திருமண வயதினராக இருந்தால், திருமணம் தடைப்பட வாய்ப்புண்டு. அரசுத் துறையில் வேலை செய்பவர்கள் சிலர் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக சிறை செல்ல வேண்டியிருக்கும். யாருக்கும் ஜாமீன் கொடுப்பதாலும் சிறைவாசம் நடந்துவிடும். புதிதாக நிலம் வாங்கும் யோகம் எதிர்பாராமல் ஏற்படும். கடுமையான முயரசிமேற்கொண்டு வீட்டில் ஒரு திருமணத்தை நடத்துவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் வம்பு வழக்குகள் ஏற்படலாம். அதுபோல கட்டுமானப் பணிகள் தடைப்படவும் வாய்ப்புண்டு. வண்டி வாகனங்கள் அடிக்கடி ரிப்பேராகி செலவு வைக்கும். சுகக் குறைவு ஏற்படும். விரயச் செலவுகள் அலைச்சல் காரணமாக உறக்கம் கெட வாய்ப்புண்டு. வருமானம் வருகிறதோ இல்லையோ, செலவுகள் மட்டும் வந்துகொண்டே இருக்கும். சிலர் தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துசெல்ல நேரிடும். தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். ஒழுங்காக ஒரு இடத்தில்கூட உங்களால் இருக்க முடியாமல் போகும். பெரியோர்கள், ஞானிகள் இவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப் போகும். சகோதரர்களால் பிரச்சினை ஏற்படும் . உங்கள் மனோபலம் குறையும். புதிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எதிரிகளின் தொல்லை அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும்.
பரிகாரம்:
குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால் . தட்சிணாமூர்த்தியை பொன்னரளிப்பூ கொண்டும், கொண்டக்கடலை கொண்டும் மாலையிட்டு வழிபடவும். சனி கெண்ட சனியாக வலம் வருவதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று எள்தீபம் ஏற்றி , வழிபடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்கலுக்கும், உதவி செய்யவும். கருப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். தினமும் ‘ஹனுமான் சலீஸா’வை பாராயணம் செய்யவும்.
.
வாழ்க வளமுடன்! வளம் சிறக்கட்டும் இனிய புத்தாண்டில்!.
********************************

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)